தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ 12ம் தேதி வரை மழை நீடிக்கும்

12ம் தேதி வரை மழை நீடிக்கும்

12ம் தேதி வரை மழை நீடிக்கும்


ADDED : ஜூலை 06, 2024 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2024 10:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 12ம் தேதி வரை, ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் விஞ்ஞானி கீதா வெளியிட்ட அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 12ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம், சேதுபாஸ்கர் அக்ரி கல்லுாரி, சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தலா 7 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, சென்னை அண்ணா பல்கலை, சிவகங்கை பயணியர் விடுதி, திருவள்ளூர், சென்னை தேனாம்பேட்டை, அண்ணாநகர், வளசரவாக்கம், ராணிப்பேட்டை பனப்பாக்கம் பகுதிகளில், தலா 6 செ.மீ., மழை பெய்துஉள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில், மாலை மற்றும் இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கூடுதல்


இம்மாதம் 1ம் தேதி முதல் நேற்று வரை, துாத்துக்குடி மாவட்டம் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதல் மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக, 241 சதவீதம் மழை கூடுதலாக பதிவாகி உள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட, 2 சதவீதம் மழை குறைவாக பதிவாகி உள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us