ADDED : மே 21, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் பாலிடெக்னிக்குகளில், கடந்த ஆண்டு இரண்டு செமஸ்டர்களுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன.
வரும் கல்வி ஆண்டில், 3வது செமஸ்டர் முதல் 6வது செமஸ்டர் வரையிலான பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான வரைவு திட்டத்தை, dte.tn.gov.in என்ற இணையதளத்தில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
இந்த பாடத்திட்டங்களில் கல்வியாளர்கள், பேராசிரியர்களுக்கு, ஆட்சேபனைகள், கருத்துக்கள் இருந்தால், ஆன்லைன் இணைப்பின் வழியாக வரும், 24க்குள் அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

