UPDATED : ஜூலை 23, 2024 07:26 PM
ADDED : ஜூலை 23, 2024 06:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நெஞ்சுவலி மற்றும் மூச்சுதிணறல் காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி உடல் நிலை தேறியதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலகுறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் சிகிச்சையில் அவரது உடல் நிலை தேறியதை அடுத்து அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார்.

