திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்: பா.ம.க., பா.ம.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்: பா.ம.க., பா.ம.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
ADDED : மார் 27, 2024 11:35 PM

சென்னை:'மகளிருக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய், திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயம். மீண்டும் ஓட்டுச்சாவடி முறையில் தேர்தல்' உள்ளிட்ட வாக்குறுதிகள், பா.ம.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக, பா.ம.க., தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.
அதன் விபரம்:
மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும
எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும்
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்
மாநிலங்களுக்கு தன்னாட்சி வழங்குவது குறித்து பரிந்துரைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் தனி ஆணையம் அமைக்க வலியுறுத்தப் படும்
தொழில் திட்டங்களுக்கு விளைநிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்படும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்திலிருந்து என்.எல்.சி.,யை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 3 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்
இந்தியா முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கப்படும்
'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்
சந்தேகத்திற்கு இடமின்றி தேர்தல் நடக்க மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை கொண்டு வரப்படும்
மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக பிற மாநில அதிகாரிகளை நியமிக்க சட்டம் கொண்டு வரப்படும்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவோம்
21 வயதுக்குகீழ் உள்ளவர்களின் திருமணத்திற்கு இரு தரப்பு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

