பஞ்சாயத்து ஆட்சி முறையானது பழமையான ஜனநாயக மதிப்புகள்: கவர்னர் ரவி சொல்கிறார்!
பஞ்சாயத்து ஆட்சி முறையானது பழமையான ஜனநாயக மதிப்புகள்: கவர்னர் ரவி சொல்கிறார்!
ADDED : ஏப் 24, 2024 10:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'பஞ்சாயத்து ஆட்சிமுறையானது பழமையான ஜனநாயக மதிப்புகள், நெறிமுறைகளின் ஆன்மாவாக உள்ளன' என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவர்னர் ரவி கூறியதாவது: பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள். பஞ்சாயத்து ஆட்சி முறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் போன்ற நமது கலாசார பாரம்பரிய கல்வெட்டுகள் அவற்றின் பெருமை மற்றும் துடிப்பான சாட்சியமாக உள்ளன. இன்று, பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

