தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ 'நெக்ஸ்ட்' தேர்வு இந்தாண்டு அமல்: வழிகாட்டுதல் வெளியீடு

'நெக்ஸ்ட்' தேர்வு இந்தாண்டு அமல்: வழிகாட்டுதல் வெளியீடு

'நெக்ஸ்ட்' தேர்வு இந்தாண்டு அமல்: வழிகாட்டுதல் வெளியீடு


ADDED : செப் 02, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இந்தாண்டு முதல், 'நெக்ஸ்ட்' தேர்வு நடத்தப்பட உள்ளதாக, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்க, 'நீட்' தேர்வு கட்டாயம். அதேபோல, இளநிலை மருத்துவம் முடித்த பின், முதுநிலை மருத்துவம் படிக்க வேண்டும் எனில், அதற்கான நீட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து, இந்தியாவில் சேவையாற்ற வருவோர், அதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாட்டு மருத்துவ படிப்பை முடித்தோருக்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 'நெக்ஸ்ட்' என்ற தேசிய தகுதி தேர்வை, இரண்டு கட்டங்களாக நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்கள், நெக்ஸ்ட் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பயிற்சி டாக்டராக முடியும்.

பின், நெக்ஸ்ட் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேரவும், மருத்துவ சேவைகளிலும் ஈடுபடவும் முடியும்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களும், இந்தியாவில் மருத்துவம் பார்க்க அளிக்க, நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதுவது கட்டாயம். கடந்த கல்வியாண்டில், இத்தேர்வை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஆண்டில் அதை அமல்படுத்த, தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்து, அதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us