முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
UPDATED : ஏப் 04, 2024 09:03 PM
ADDED : ஏப் 04, 2024 07:47 PM

திருநெல்வேலி : திருநெல்வேலிமாவட்ட திமுக செயலாளர் அவருடைய கட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சற்று முன்பு சோதனை லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் காக்கட்டியுள்ளது திருநெல்வேலியில் மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வீடு மகாராஜா நகரில் உள்ளது. அதே பகுதியில் மாவட்ட கட்சி அலுவலகமும் உள்ளது. நேற்று மாலை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவலின் பெயரில் வருமானவரித்துறையினர் பறக்கும் அணியினர் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்
அலுவலகத்தில் இருந்த ஒரு பையில் கட்டு கட்டான பணத்தை தோழமை கட்சியின் நிர்வாகி காரில் தூக்கிப் போட்டனர். அதனை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர் அதில் லட்சக்கணக்கில் பணம் இருந்தது தெரியவந்தது தொடர்ந்து அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது . சோதனையின் போது மத்திய மாவட்ட செயலாளர் டிபிம் மைதீன் கான் உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் இருந்தனர். தகவல் இருந்து எம்எல்ஏ அப்துல் வகாப் மற்றும் நிர்வாகிகள் அங்கு சென்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
2 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது..சோதனையில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை, தேர்தல்பரப்புரையை தடுக்கவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக ஆவுடையப்பபன் குற்றம் சாட்டினார்.

