தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : செப் 11, 2024 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 12:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசியலில் ஓய்வு கிடையாது!

அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ஓய்வு வயது என ஒன்று கிடையாது என்பதை நம்புகிறேன். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள், மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் கடைசி மூச்சு வரை அதைச் செய்ய வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே

தலைவர், காங்கிரஸ்

நாட்டை இழிவுபடுத்தும் ராகுல்!

வெளிநாட்டில், சொந்த நாடு குறித்து விமர்சிப்பது தேசப்பற்று கிடையாது. அமெரிக்காவில் பா.ஜ., அரசை மட்டுமல்ல தேர்தல் கமிஷனையும் ராகுல் விமர்சித்துள்ளார். தொடர் தோல்வியால் விரக்தியடைந்துள்ள அவர், வெளிநாட்டுக்குச் சென்று சொந்த நாட்டை இழிவுபடுத்துகிறார்.

சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய அமைச்சர், பா.ஜ.,

காங்., நாடகம் அம்பலம்!

நாடு நல்ல நிலையை எட்டும் போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று ராகுல் பேசியுள்ளார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற கோரிக்கையை வைத்து ஆட்சிக்கு வர கனவு காணும் அவரது நாடகம் அம்பலமாகியுள்ளது. இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே காங்கிரசின் சதித்திட்டம்.

மாயாவதி

தலைவர், பகுஜன் சமாஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us