கட்டுமான பொருட்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கட்டுமான பொருட்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 21, 2024 04:54 AM

பண்ணைக்காடு கொடைக்கானல் பிரிவு இடையே சில மாதங்களாக ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளுக்காக கட்டுமான பொருட்களை வளைவுகளில் குவித்துள்ளதால் குறுகிய ஒரு வழித்தடத்தில் வாகனங்கள் தடுமாறும் நிலை உள்ளது. மேலும் ரோட்டோரம் அகலப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் சீர் செய்யப்படாத நிலையில் நாள்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இந்நிலை குறித்து வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும்.
உடனடியாக அகற்ற நடவடிக்கை
ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சில தினங்களில் ரோடு அகலப்படுத்து பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
ராஜன், நெடுங்சாலை உதவி கோட்ட பொறியாளர், கொடைக்கானல்.

