ADDED : ஏப் 11, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:பிரதமர் மோடி தன் பேச்சின்போது, தி.மு.க., மற்றும் காங்கிரசை விமர்சித்தபோதும், எந்த எதிர்க்கட்சி பிரமுகர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை. தி.மு.க., - எம்.பி., ராஜா குறித்த விமர்சனத்தின்போது கூட, தி.மு.க.,வின் ஒரு முக்கிய தலைவர் என்று மட்டுமே குறிப்பிட்டார்.
தி.மு.க.,வை மட்டுமே அதிகம் விமர்சித்த மோடி, அ.தி.மு.க., பற்றி குறிப்பிடவே இல்லை. பொதுவாகவே பா.ஜ.,வினர் பேச்சில், இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை மோசமாக ஆட்சி செய்கின்றனர் எனக் குறிப்பிடுவர்.
ஆனால் இம்முறை, 'திராவிடக் கட்சிகள்' என்ற சொல்லையே பிரதமர் மோடி தவிர்த்து விட்டார். அ.தி.மு.க., பற்றியும் பேசவில்லை.
பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே தான் போட்டி என்பதை, அழுத்தம் திருத்தமாக உணர்த்துவதுபோல, அவரது பேச்சு அமைந்திருந்தது.---

