ADDED : செப் 12, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ↓கடந்த 2014 முதல் 2021 வரை தனித்தேர்வர்களாக மேல்நிலை தேர்வுகளை எழுதி, அசல் மதிப்பெண் சான்றிதழை பெறாதோர், உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும். தாமதித்தால் கழிவுத்தாள்களாக மாற்றப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.
* ↓தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க, சென்னையில் உள்ள அறநிலையத்துறை தலைமையகத்தில், மாநில வல்லுனர் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக நேற்று நடந்த கூட்டத்தில், 226 கோவில்களில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

