ADDED : செப் 10, 2024 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை எழும்பூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேர், கோவில் விழாவுக்கு சென்றபோது, திருச்சி - செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் இறங்கி குளித்தனர். அப்போது, நீரில் மூழ்கி இறந்தனர்.
இதை அறிந்த முதல்வர், அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், பொது நிவாரண நிதியிலிருந்து, தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

