ADDED : ஜூன் 19, 2024 01:27 AM
தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும் ஆறு ஓவியர்கள் மற்றும் சிற்பிகளுக்கு, கலைச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு தகுதியானோர், ஜூலை 1க்குள், 'இயக்குனர், கலை பண்பாட்டு துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் தகவல்களுக்கு, 044 - 2819 3157, 044 - 2819 3195 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் இளநிலை பட்டப் படிப்புகளான பி.வி.எஸ்சி., - ஏ.எச்., படிப்புகளுக்கு இதுவரை, 10,457 பேர்; பி.டெக்., படிப்புக்கு, 2,186 பேர் என, மொத்தம், 12,643 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இம்மாதம், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால், வரும் 24 முதல் 26ம் தேதி வரை, தங்களின் பயனாளர் பெயர், கடவுச்சொல் பயன்படுத்தி, விண்ணப்பத்தை திருத்தம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில், மின் வாரியத்திற்கு, மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 600 மெகா வாட் திறன் உடைய அலகில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம், சேலம் மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், மேட்டூர் விரிவாக்க மின் நிலைய அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று அதிகாலை, 3:10 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

