sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வழிகாட்டி தொடர்ச்சி/ எண்ணற்ற படிப்புகள்: எல்லையில்லா வாய்ப்புகள்

/

வழிகாட்டி தொடர்ச்சி/ எண்ணற்ற படிப்புகள்: எல்லையில்லா வாய்ப்புகள்

வழிகாட்டி தொடர்ச்சி/ எண்ணற்ற படிப்புகள்: எல்லையில்லா வாய்ப்புகள்

வழிகாட்டி தொடர்ச்சி/ எண்ணற்ற படிப்புகள்: எல்லையில்லா வாய்ப்புகள்


ADDED : மார் 24, 2024 01:28 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழிகாட்டி நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் பேசியதாவது:

நம் முன்னோர்கள், அறிவியல், வரலாறு, தொழில்நுட்பம், கலைகள் ஆகியவற்றிலும், வானியலிலும் பெரும் திறமை படைத்தவர்களாக இருந்துள்ளனர்.

அவற்றை எல்லாம் மறந்து விட்டு, இப்போது கல்வி பெரும் சுமையாக உள்ளதாக கருதுகிறோம். நம் பழமையை எல்லாம் மறக்காமல், நம்மால் முடியும் என்பதை உணர்ந்தால், எல்லாமே சாத்தியம் தான்.

புதிய தகவல்களையும், தொழில்நுட்பத்தையும் கற்கும் திறன் படைத்தவர்கள் மட்டுமே, பெரிய நிறுவனங்களில் பெரிய சவால்களை ஏற்று, அதிக சம்பளத்தில் வேலை செய்கின்றனர்.

உயர்கல்வியில் சேர்வதற்கு, நீட், ஜே.இ.இ., போன்று, ஏராளமான போட்டி தேர்வுகள் உள்ளன. பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கூட, இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து, லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் வேலையை பெற முடியும்.

படிப்பை தேர்ந்தெடுப்பது தான் வாழ்க்கையை தீர்மானிக்கும். எந்த படிப்பு படித்தால், நமக்கு வேலை கிடைக்கும்; எந்த நிறுவனத்தில் படித்தால் நமக்கு வாய்ப்பு இருக்கும். நாம் படிக்கும் போது, எந்த அளவுக்கு நம் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதே ஆராய்ந்த பிறகே படிப்பையும், கல்வியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எல்லாரும் சாதிக்கலாம்



'இப்போ பே' நிறுவனர் மோகன் பேசியதாவது:

கிராமங்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல விரும்பினேன். கூகுள் பே, போன்பே, பே.டி.எம்., போன்ற பெரிய நிறுவனங்களுடன், உங்களால் போட்டியிட முடியாது என, பலர் அறிவுரை கூறினர்.

தற்போது, எங்களிடம் கூகுள் பே, போன் பே, பே.டி.எம்., போன்றவற்றில் பணிபுரிந்தவர்கள் உட்பட, 400 பேர் பணியாற்றுகின்றனர். எங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையை, 4.5 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.எனவே, கடின உழைப்பும், முயற்சியும், புதிய எண்ணங்களும் இருந்தால், எல்லாரும் சாதனையாளர் ஆகலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us