மதுவிலக்கு திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல்: முதல்வர்
மதுவிலக்கு திருத்த மசோதா நாளை சட்டசபையில் தாக்கல்: முதல்வர்
UPDATED : ஜூன் 28, 2024 07:50 PM
ADDED : ஜூன் 28, 2024 07:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பா.ம.க, தலைவர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதில்அளித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்டவற்றை தடுக்க சட்டத்தில் தண்டனைகள் போதுமானதாக இல்லை. தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். விஷசாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

