ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி
ADDED : ஏப் 10, 2024 11:37 PM
சென்னை:தமிழகம் முழுதும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், ஓட்டுச்சீட்டை பொருத்தும் பணி, துவங்கியது.
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தொகுதிகளில், 76 பெண்கள் உட்பட, 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில், 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 பட்டன்கள் இருக்கும். எனவே, 15 வேட்பாளர்களின் பெயர் இடம் பெறும். வேட்பாளர்கள் பெயருக்கு பின், கடைசியாக, 'நோட்டா' பட்டன் இடம் பெறும். வேட்பாளர்கள் 15 பேருக்கு மேல் போட்டியிட்டால், கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர் பெயர், சின்னம் பொறிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டை பொருத்தும் பணி, நேற்று தமிழகம் முழுதும் துவங்கியது. இந்த பணி, அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்து வருகிறது.

