பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் நேர்த்திக்கடனுக்கு தடை: கார்த்தி பீதி கிளப்புகிறார் கார்த்தி
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் நேர்த்திக்கடனுக்கு தடை: கார்த்தி பீதி கிளப்புகிறார் கார்த்தி
ADDED : மார் 30, 2024 12:54 AM
காரைக்குடி:''மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில்களில் நேர்த்திக்கடனாக கிடா வெட்டுவது, சேவல் பலியிடுவது போன்றவைகளை செய்ய விட மாட்டார்கள்,'' என, சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் காங்., வேட்பாளர் கார்த்தி தெரிவித்தார்.
கோட்டையூரில் காங்., வேட்பாளர் அறிமுகம் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர் பெரியகருப்பன், கார்த்தி எம்.பி., தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கார்த்தி பேசியதாவது: பா.ஜ., கொள்கை ஹிந்தியும் இந்துத்துவாவும். அதற்கு அர்த்தம் அனைவரும் ஹிந்தி கற்கவேண்டும். இந்துத்துவா என்றால் சிறுபான்மையினரை ஒதுக்க வேண்டும். எந்த உதவியும் தரக்கூடாது என்பது தான். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் நாம் நினைத்தது நடக்காது. நேர்த்திக்கடன் செய்வது பிடிக்காது என்பார்கள் என்றார்.

