ADDED : செப் 11, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு யாரை வேண்டுமானாலும், அவர்கள் அழைக்கலாம்; அந்த அழைப்பை ஏற்று யார் வேண்டுமானாலும் மாநாட்டில் பங்கேற்கலாம். ஆனால், வி.சி.,க்களுக்கான கூட்டணி என்பது, தி.மு.க.,வோடு தான். இதில், எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை. முதல்வரும், திருமாவளவனும் மிக நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விரும்புகிற மிகச் சிறந்த நண்பனாக திருமாவளவன் உள்ளார். அவரை யார் வேண்டுமானாலும் அழைக்கலாம்; அதற்காக, அவர் முதல்வரை விட்டு எங்கும் செல்ல மாட்டார்.
- ரகுபதி,
தமிழக சட்ட அமைச்சர்.

