ADDED : ஏப் 09, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : குரூப் - 1 பதவியில் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் - 1 பதவியில், 95 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஆக., 10 முதல், 13 வரை முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்முக தேர்வுக்கான பட்டியல், கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, கடந்த, 26ம் தேதி முதல் மூன்று நாட்கள் நேர்முக தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை வழங்கப்பட்டு, அதன் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.
கூடுதல் விவரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

