ADDED : செப் 12, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், பணிக்கொடை வரம்பை, 20 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த உயர்வு, கடந்த ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக அரசும், ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியின் போது இறக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை உச்சவரம்பை, 20 லட்சத்தில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளது. இது, கடந்த ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.
இதற்கான அரசாணையை நிதித்துறை செயலர் உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். இது, பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

