கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ: வனநிலங்கள் சேதம்
கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ: வனநிலங்கள் சேதம்
ADDED : ஏப் 10, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்,: கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீயால் ஏராளமான வனநிலங்கள் தீக்கிரையாகின.
தகிக்கும் கோடை வெயிலால் கொடைக்கானலில் வனப்பகுதியில் உள்ள தாவரங்கள் கருகி வருகின்றன. இந்நிலையில் பூம்பாறை, மன்னவனுார் பாரிகோம்பை அடர்ந்த அந்நிய மர சோலையில் காட்டுத் தீ பரவியது. நூற்றுக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் தீக்கிரையாகின. வனவிலங்குகளும் பாதித்தன.
சூறைக்காற்றுடன் சுட்டெரிக்கும் வெயிலால் வனத்துறையினர் தீயணைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அருகில் சோலை மரங்கள் உள்ள வெம்பாடி வனப்பகுதிக்குள் தீ பரவாமல் இருக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வானுயுர புகையால் சுற்று கிராம பகுதிகளில் சாம்பல் படிந்தன. கோடை மழை பொழிந்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

