ADDED : ஜூன் 07, 2024 08:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''குறைகளை சுட்டிக் காட்டுங்கள் நிறைவேற்றுகிறோம். தயவு செய்து குற்றம் காண வேண்டாம்,'' என, அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, ஆக., 24, 25 தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்தது.
அதில், அமைச்சர் பேசுகையில், ''இது உண்மையான ஆன்மிகவாதிகளுக்காக நடக்கும் ஆட்சி என்பதை மக்கள் தேர்தல் தீர்ப்பின் வாயிலாக தெரிவித்து விட்டனர். எங்களுக்கு அறிவுரைகளை கூறுங்கள்; ஏற்று செயல்படுத்த விரும்புகிறோம். குறைகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைவேற்றுகிறோம். தயவு செய்து குற்றம் காண வேண்டாம்,'' என்றார்.
கூட்டத்தில், அறநிலைய துறை செயலர் மணிவாசன், அறநிலையத் துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

