நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
ADDED : மார் 08, 2025 10:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; தி.மு.க., எம்.பி.,க்கள் ஆலோசனைக்.கூட்டம் நாளை (மார்ச் 9) சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது. இந் நிலையில் நாளை (மார்ச் 9) தி.மு.க., லோக்சபா, ராஜ்ய சபா எம்.பி.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இக்கூட்டத்தில், நடப்பு பார்லி. கூட்டத்தொடரில் எம்.பி.,க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த பிரச்னைகளை மையப்படுத்தி பேச வேண்டும் என்பன பற்றி விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் கூட்டத்தொடரின் போது தி.மு.க., எம்.பி.,க்கள் அவை நடவடிக்கைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

