ADDED : மே 19, 2024 01:53 AM
சென்னை: பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி விடுத்த அறிக்கை:
பிரதமர் மோடி எதை பேசினாலும், அதை திரித்து ஆதாயம் தேட முயற்சிப்பது முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, 'இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்களின் வழக்கம். அந்த வகையில், அவர்கள், 'இலவச திட்டங்களுக்கு எதிராக மோடி பேசுகிறார்' என, திரித்து வருகின்றனர்.
இலவச திட்டங்களுக்கு, பா.ஜ., எதிரி அல்ல. தேர்தல் வெற்றிக்காக குடும்ப ஆட்சியை தக்க வைக்க இலவச திட்டங்களை அறிவிப்பது, நாட்டின் வளர்ச்சியை முடக்கி விடும்.
தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், உ.பி., பீஹார் மாநில மக்களை இழிவுபடுத்தாததே நாளே இல்லை.
அக்கட்சியினரின் உண்மை முகத்தை மோடி அம்பலப்படுத்தியும், வட மாநிலங்கள் - தென் மாநிலங்கள் இடையே பிரிவினை உண்டாக்க பார்ப்பதாக ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, ஆரியம், திராவிடம், ஹிந்தி தெரியாது போடா, சனாதானத்தை ஒழிப்போம்' என்று பிரிவினையை விதைப்பதே தி.மு.க., தான். இண்டியா கூட்டணி கட்சிகளின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்ப
மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

