மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டால் தி.மு.க., அரசு பதவி விலகணும்: அன்புமணி
மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டால் தி.மு.க., அரசு பதவி விலகணும்: அன்புமணி
ADDED : ஜூன் 30, 2024 02:42 AM
சென்னை:'மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டால், தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
'தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களில் இருந்து, மது உள்ளே வரவும் வாய்ப்பு இருக்கிறது' என்று,மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி, சட்டசபையில் பேசியுள்ளார்.
'உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில், 'கிக்' இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்' என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் பேசியுள்ளார்.
அமைச்சர்களின் கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும், அதுகுறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில்,காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என, வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது.
இவ்வளவையும் வைத்துக் கொண்டு, கள்ளச்சாராயத்தைத் தடுக்க முடியாவிட்டால், அது அரசின் இயலாமைதான்.
மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காக, உழைக்கும் மக்கள் மீது பழி சுமத்துவதுகண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

