ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள்; ஆய்வில் தகவல்
ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள்; ஆய்வில் தகவல்
ADDED : நவ 29, 2024 02:30 PM

புதுடில்லி: உலகளவில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய விரும்புவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஜே.எல்.எல்., எனும் சர்வதேச ரியல் எஸ்டேட் சர்வீஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், உலகளவில் 85 சதவீத நிறுவனங்கள் ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்களாவது அலுவலகம் வந்து பணி புரிய விரும்புவதாகவும், இந்தியாவை ஒப்பிடும் போது இது அதிகரித்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது, 95 சதவீத நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த உரிமையாளர்கள், இதனை விரும்புவது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் 54 சதவீத நிறுவனங்களும், உலகளவில் 43 சதவீத நிறுவனங்களும், 2030க்குள் அலுவலக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகின்றன.
மேலும், வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, அலுவலக கட்டமைப்பை மாற்றுவதற்கு அதிகளவிலான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும், குறிப்பாக, 95 சதவீத நிறுவனங்கள், ஏ.ஐ., (AI) தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய விரும்புவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, பெரும்பாலானோர் கார்ப்பரேட் துறையில் நிலைத்தன்மையுடன் இருக்க முக்கியத்துவம் கொடுப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வானது உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் மற்றும் தொழிலதிபர்கள் என் 2,300 பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

