ADDED : ஏப் 22, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: சென்னை, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவண்ணாமலைக்கு, கடந்த, 19ல் அரசு பஸ் புறப்பட்டது. இதில் பயணித்த இரு ஆண்கள், ஒரு பெண் உள்ளிட்ட மூவர் செஞ்சிக்கு டிக்கெட் கேட்டனர்.
கண்டக்டர் ராமசாமி, செஞ்சிக்கான கட்டணம், 130 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக, திருவண்ணாமலைக்கான கட்டணம், 175 ரூபாயை வசூலித்தார்.
இதுகுறித்து பயணியர் அளித்த புகாரின்படி, வேலுார் போக்குவரத்து மண்டல மேலாளர் எட்வின் சாமுவேலு விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்த கண்டக்டர் ராமசாமியை, 'சஸ்பெண்ட்' செய்து, அவர் உத்தரவிட்டார்.

