கோயில் சொத்துக்களை மீட்க உத்தரவிட வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கோயில் சொத்துக்களை மீட்க உத்தரவிட வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஏப் 02, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சேலம் ராதாகிருஷ்ணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: துாத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியில் சங்கரராமேஸ்வரர் கோயில் உள்ளது. இதற்கு சொந்தமான நிலத்திற்கு தனி நபர்களின் பெயர்களில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சொத்துக்களை அளவீடு செய்து எல்லைகளை வரையறுக்க வேண்டும். ஆக்கிரமிப்பிற்கு உடந்தையான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சொத்துக்களை மீட்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி ஏப்.,16 க்கு ஒத்திவைத்தது.

