ரூ.50 தான் போகுது ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய முடியலை!
ரூ.50 தான் போகுது ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய முடியலை!
ADDED : மே 14, 2024 03:53 AM
சென்னை: பொதுமக்கள் வசதிக்காக பல இடங்களில், ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன.
அதிக தரத்திலான பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாராகும் ஆதார் அட்டையை, ஆதார் இணையதளம் வழியாக, 50 ரூபாய் கட்டணம் செலுத்தி பெறலாம். வீட்டு முகவரிக்கு பிளாஸ்டிக் ஆதார் கார்டு அனுப்பி வைக்கப்படும்.
சில நாட்களாகவே, பி.வி.சி., ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பித்தால், பணம் பிடித்தம் செய்யப்படுகிறது; முறைப்படி பதிவு செய்ய முடியாமல், இணைப்பு ரத்தாகி விடுகிறது.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:
ஆதார் இணையதளம் வாயிலாக, பி.வி.சி., ஆதார் அட்டையை பெற இணையதளத்தில் முயற்சி செய்தோம். எங்கள் வங்கி கணக்கில் இருந்து, 50 ரூபாய் பணம் பிடிக்கப்பட்டது. பதிவு எண் விபரம் என்று பார்த்தால், சில வினாடிகளில் உங்கள் ஆர்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது என, எஸ்.எம்.எஸ்., வருகிறது. இதுவரை, பிடிக்கப்பட்ட பணமும் வங்கி கணக்கிற்கு திரும்பவில்லை.
இப்படிப்பட்ட டிஜிட்டல் சேவைகள், மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆதார் உதவி மைய அதிகாரிகள் கூறுகையில், 'ஆதார் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பிரச்னைகள் தீரும்' என்றனர்.

