ADDED : ஜூன் 09, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக மின்வாரியத்திடம் மின் இணைப்பு பெறாமல், மின் வினியோக சாதனங்களில் இருந்து, சிலர் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். வீட்டு பிரிவில் மின் இணைப்பு பெற்று, வணிக பயன்பாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற மின் திருட்டை கண்டறிந்தால், 94458 57591 மொபைல் போன் எண்ணில் தெரிவிக்குமாறு, மக்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுதவிர, www.tnebltd.gov.in/theftonline/petitionentry.xhtml என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

