இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடுகிறது: ராகுல் குற்றச்சாட்டு
இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடுகிறது: ராகுல் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 15, 2024 07:32 PM

பந்தலூர்: இந்தியாவை பிளவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடுகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தாளூர் பகுதிக்கு இன்று காங்., எம்.பி., ராகுல் மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் வந்தார் தாளூரில் உள்ள நீலகிரி கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் காரில் பயணித்த ராகுல் அங்கிருந்த தேவாலய மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் மத்தியில் பேசினார் அப்போது அங்கு குழந்தைகளை கண்ட அவர் காரில் இருந்து இறங்கி சென்று குழந்தைகளுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார் .அவரை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் கட்சியின் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் வயநாடு எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், சித்திக், உட்பட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து அரை கிலோமீட்டர் கார் மூலமாக அருகிலுள்ள தேவாலய கூட்ட அரங்கிற்கு வந்தார். . பின்னர் அங்கிருந்த கூட்டரங்கில் சுமார் ஐந்து நிமிடம் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றினார். இதில் இந்திய தேசம் ஒற்றுமையாக உள்ளது இதனை பா.ஜ.க. அரசு பிளவு படுத்த முயற்சி செய்கிறது, ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்ற கோட்பாட்டில் மக்களை பிரிக்க நினைக்கிறது. பா,ஜ.,அரசு மக்களுக்கு எதிரானது, இந்திய நாட்டின் தலைவர் எல்லா மக்களையும் ஒன்றுஇணைப்பவராக இருக்க வேண்டும் ஆனால் பிரதமர் மோடியோ அவ்வாறு இல்லை என பேசிய அவர் 10 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்கு பிரச்சாரத்தில் ஈடுபட சென்றார். ராகுல் வருகையால் மாநில எல்லை பகுதியில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

