விதை நெல், உரத்துடன் வங்கி கடனும் தர வேண்டும்: பழனிசாமி
விதை நெல், உரத்துடன் வங்கி கடனும் தர வேண்டும்: பழனிசாமி
ADDED : ஜூலை 29, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழனிசாமி அறிக்கை: காவிரியில் தண்ணீரை பெறாததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததாலும், சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்படாததாலும், விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான விதை நெல், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
சம்பா சாகுபடிக்கு, கடந்த ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் உடனே வழங்க வேண்டும்.
காவிரியில் திறக்கப்படும் தண்ணீர், குளம், குட்டை மற்றும் கடைமடை பகுதிகள் வரை செல்ல ஏதுவாக வாய்க்கால்கள், மதகுகளை பழுது நீக்க வேண்டும். கரைகளை பலப்படுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

