ஏப்.04-ம் தேதி அமித்ஷா தமிழக நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு
ஏப்.04-ம் தேதி அமித்ஷா தமிழக நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு
UPDATED : ஏப் 03, 2024 07:01 PM
ADDED : ஏப் 03, 2024 06:53 PM

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் அமித்ஷாவின் 4-ம் தேதி வருகை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஏப். 04-ம் தேதி தமிழகம் வருகை தர திட்டமிட்டிருந்தார்.
தமிழகத்தில் தேனி தொகுதி வேட்பாளர் டி.டி.வி., தினகரனை ஆதரித்து ஏப். 04-ம் தேதி மாலையில் பிரசாரம் மற்றும் ரோட்ஷோ நடத்துவது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது இதற்காக மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டதால் மேடை பிரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இன்று வெளியான அறிவிப்பில் ஏப்04-ம் தேதி நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்ட தாகவும், பின்னர் தேதி அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

