ADDED : ஜூன் 10, 2024 12:54 AM

சென்னை: ஆகாஷ் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில், ஆகாஷ் பயிற்சி நிறுவனத்தில் படித்த, 21 மாணவர்கள், 720க்கு,720 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முன்னிலை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில், 14 பேர் நேரடி வகுப்பிலும், 7 பேர் தொலைநிலை பயிற்சியும் பெற்றவர்கள்.
ஆகாஷ் நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்கு, நீட் தேர்வில் சிக்கலான கேள்விகளுக்கும், எளிதில் பதில் அளிக்கும் வகையில், மிகவும் நுணுக்கமான பயிற்சி வழங்கப்பட்டது.
மிகக்குறுகிய காலத்தில், சிக்கலான பாடப்பிரிவுகளையும் எளிதாக புரிந்து படிக்க உதவியதாக, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவன சி.இ.ஓ., மற்றும் மேலாண்மை இயக்குனர் தீபக் மெஹ்ரோத்ரா கூறுகையில், 'மிகச்சிறந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
அவர்களின் தொடர் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, அதேபோன்று அவர்களின் பெற்றோர் அளித்த ஒத்துழைப்பு தான், மாணவர்களின் இந்த வெற்றிக்கு காரணமாகும்' என்றார். ஆகாஷ் நிறுவனத்தில் நேரடி வகுப்பு பயிற்சி பெற்று, நீட் தேர்வில், 720 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெயர் விபரம்:
மிர்துல் மன்யானந்த் - டில்லி; ஆயுஷ் நாக்ரய்யா - ஜான்சி; அக் ஷா பங்க்ரியா - ஹல்த்வானி; ஆதித்யா குமார் பண்டா - சென்னை; அர்க்யதீப் தத்தா - கொல்கத்தா; சக் ஷம் அகர்வால் - சிலிகுரி; சுஜோய் தத்தா - டில்லி; ஆர்யன் யாதவ் - லக்னோ; மாணவ் பிரியதர்ஷி - ராஞ்சி; பலன்ஷா அகர்வால் - மும்பை; துருவ் கார்க், சமித் குமார் சைனி, இராம் குவாசி - ஜெய்ப்பூர்; கீர்த்திஷர்மா - சூரத்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

