தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது புகார் பிரதிவாதியாக சேர்க்க அறிவுரை
தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது புகார் பிரதிவாதியாக சேர்க்க அறிவுரை
ADDED : ஆக 20, 2024 04:26 AM
சென்னை: நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக, தி.மு.க., --- எம்.எல்.ஏ.,வுக்கு எதிராககுற்றம் சாட்டப்பட்டு உள்ளதால், பிரதிவாதியாக அவரை வழக்கில் சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திஉள்ளது.
திருப்பத்துாரை சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு:
எங்களுக்கு திருப்பத்துாரில் சொத்துக்கள்உள்ளன. அதனருகேபொள்ளாச்சியை சேர்ந்த பிரேமா என்பவருக்கு சொத்து உள்ளது.
நாங்கள், 1994ல் வாங்கிய நிலத்தின் சர்வே எண்ணை, தன் நிலத்துடன் இணைக்கும்படி கோரி, பிரேமா வழக்கு தொடர்ந்தார்.
உரிய நடவடிக்கை எடுக்க திருப்பத்துார் தாசில்தாருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தாசில்தார் முன் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்தேன்.
இதையடுத்து, உரிய முடிவெடுக்க, திருப்பத் துார் ஆர்.டி.ஓ.,க்கு அனுப்பினார். என் மகன், ஆர்.டி.ஓ., முன் ஆஜராகி ஆவணங்களை அளித்தார்.
ஆர்.டி.ஓ., விசாரணையில், திருப்பத்துார் எம்.எல்.ஏ., நல்லதம்பி தலையிட்டார். நில மாபியாக்களுடன் அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் கூட்டு சேர்ந்துள்ளனர்.
எம்.எல்.ஏ.,வின் தலையீடு குறித்து, கலெக்டருக்கு மனு அளித்தேன். கடைசியில் என் சொத்தின் சர்வே எண்ணை, பிரேமாவின் பட்டாவில் சேர்த்து விட்டனர். இதற்கான உத்தரவை, ஆர்.டி.ஓ., பிறப்பித்தார்.
இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. மாவட்ட வருவாய்அதிகாரியிடம் மேல்முறையீடு செய்துள்ளேன். எனவே, ஆர்.டி.ஓ.,வின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் மேற்பார்வையில் என் மேல்முறையீட்டை, மாவட்ட வருவாய் அதிகாரி முடிவு செய்ய உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி எஸ்.சவுந்தர் முன், விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு பதில் அளிக்க, திருப்பத்துார் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 2க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
திருப்பத்துார் எம்.எல்.ஏ., நல்லதம்பிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு உள்ளதால், அவரை யும் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கும்படி, மனுதாரருக்கு நீதிபதிஅறிவுறுத்தினார்.

