UPDATED : மே 21, 2024 10:36 AM
ADDED : மே 21, 2024 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், தற்காலிக மின் இணைப்பு, மின் கட்டண விகிதம் மாற்றம், மின் சாதனங்கள் இடமாற்றம் என, அனைத்து மின்சார சேவைகளுக்கும், மின் வாரியத்தின், www.tangedco.org இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, அந்த இணையதளத்திற்கு சென்று, 'ஆன்லைன் சர்வீஸ்' என்ற பகுதியை தேர்வு செய்து, விண்ணப்ப பகுதிக்கு செல்ல வேண் டும். அதை தேர்வு செய்ய பலர் சிரமப்படுகின்றனர்.
எனவே, அனைத்து மின்சார சேவைகளுக்கும் விண்ணப்பிக்க, app1.tangedco.org/nsconline/ என்ற புதிய இணையதள முகவரியை மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த இணையதள முகவரிக்கு சென்றதும், நேரடியாக மின்சார சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

