வங்கதேசத்தில் பதற்றம்; தமிழகம் திரும்பிய 49 மாணவர்கள்
வங்கதேசத்தில் பதற்றம்; தமிழகம் திரும்பிய 49 மாணவர்கள்
ADDED : ஜூலை 22, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : வங்கதேசத்தில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், 49 மாணவர்கள் நேற்று தமிழகம் திரும்பினர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி பயில்வதற்காக வங்கதேசம் சென்றுள்ளனர். அங்கு நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, பாதுகாப்பு கருதி, மாணவர்கள் தமிழகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அயலக தமிழர் நலத்துறை வாயிலாக, மாணவர்கள் குறித்து, வங்கதேசத்தில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் தமிழ் அமைப்புகள் வாயிலாக, விவரங்கள் பெறப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, நேற்று 49 மாணவர்கள், வங்கதேசத்தில் இருந்து கோல்கட்டா, குவஹாத்தி, அகர்தலா விமான நிலையங்கள் வழியாக, சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

