"நற்பணி செய்தவர்கள் நாட்டுப்பணி செய்யுங்கள்": கமல் வேண்டுகோள்
"நற்பணி செய்தவர்கள் நாட்டுப்பணி செய்யுங்கள்": கமல் வேண்டுகோள்
ADDED : ஏப் 03, 2024 03:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நற்பணி செய்தவர்கள், இன்று நாட்டுப்பணி செய்யுங்கள் என தனது கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி விமான நிலையத்தில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நானும் மக்களின் ஒருவன் என்பதால் எனது மனநிலை தான் மக்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். குடியுரிமை, அரசியலமைப்பு சட்டத்தை தற்காத்துக் கொள்ளும் நேரம் இது.
இதனால் கட்சி என்ற வரையறையை கடந்து வந்திருக்கிறேன். தமிழன் மற்றும் இந்தியன் என்பது தான் பிரதானமாக எனக்கு தெரிகிறது. நற்பணி செய்தவர்கள், இன்று நாட்டுப்பணி செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

