ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலத்தில் டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலத்தில் டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்
ADDED : ஏப் 08, 2024 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ் இரவு 11:30 மணிக்கு கிருஷ்ணன் கோயில் அருகில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் கவிழ்ந்ததில் பஸ்ஸில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். சம்பவ இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மதுரையில் இருந்து ராஜபாளையம் வந்த பஸ்கள் சிவகாசி வழியாக வழித்தடம் மாற்றி அனுப்பப்பட்டது.

