UPDATED : மார் 23, 2024 12:58 AM
ADDED : மார் 22, 2024 09:58 PM

சென்னை: சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெ்ன்றது.
:2024 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் விளையாடியது. டாஸ் வென்று முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது.
பெங்களூரு அணியின் அனுஜ் ராவத் 48 ரன்களும் டுபிளசி 35 ரன்களும் கோஹ்லி 21 ரன்களும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல்38 ரன்களும் சேர்த்தனர். இந்நிலையில் 174 ரன்கள் சென்னை அணிக்கு இலக்கு நிர்ணயித்தது.
கோஹ்லி சாதனை
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே 12000 டி20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார் மேலும் உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கிறிஸ் கெயில், சோயப் மாலிக், கீரான் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த மைல்கல் சாதனையை செய்துள்ளனர். அதே சமயம், குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோலி.
6 விக்கெட் வித்தியாச்ததில் வெற்றி
தொடர்ந்து 174 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய சென்னை அணி இறுதியில் 6 விக்ககெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வெற்றி கொண்டது.

