தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு புதிய நிர்வாகிகள்
தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு புதிய நிர்வாகிகள்
ADDED : ஆக 24, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கரூர் மேற்கு மாவட்ட அவைத் தலைவராக கணேசன், பொருளாராக ஓம் சக்தி சேகர், தொழில் நுட்ப பிரிவு செயலாளராக அன்பு ஆகியோரை நியமித்து, ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, புதிய நிர்வாகிகள் மேற்கு மாவட்ட செயலாளர் ரமேசை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், இணை செயலாளர் கவிதா, மாணவர் அணி செயலாளர் மாரி, நகர செயலாளர்கள் அன்பழகன், கோபால் உள்ளிட்ட, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

