விஜயகாந்த் மகன் தொகுதியில் பிரசாரம்: முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி
விஜயகாந்த் மகன் தொகுதியில் பிரசாரம்: முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி
ADDED : ஏப் 01, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்வதில், முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தொகுதியில், விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். விஜய பிரபாகரனை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் செய்துள்ளார். மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், விஜயகாந்த் மகனை எதிர்த்து போட்டியிடும், காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்வதில், முக்கியதலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

