ADDED : டிச 17, 2025 06:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்துக் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு டன் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என விருதுநகரில் சி.ஐ.டி.யு., கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தலைவர் முகமது அலி ஜின்னா முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் மகாலட்சுமி பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் சாராள், கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ராமர், சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் தேவா பேசினர்.

