/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரவோடு இரவாக அனுமதியின்றி குழாய் பதிக்கப்பட்டதா; ஆய்வு செய்யுமா நகராட்சி
/
இரவோடு இரவாக அனுமதியின்றி குழாய் பதிக்கப்பட்டதா; ஆய்வு செய்யுமா நகராட்சி
இரவோடு இரவாக அனுமதியின்றி குழாய் பதிக்கப்பட்டதா; ஆய்வு செய்யுமா நகராட்சி
இரவோடு இரவாக அனுமதியின்றி குழாய் பதிக்கப்பட்டதா; ஆய்வு செய்யுமா நகராட்சி
ADDED : ஜூலை 08, 2025 01:12 AM

விருதுநகர்:விருதுநகர் வசந்தம் நகரில் நகராட்சி அனுமதியின்றி இரவோடு இரவாக ரோட்டை தோண்டி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பிற பகுதிகளுக்கும் முன்னுதாரணமாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் சாத்துார் ரோட்டில் வசந்தம் நகர் அமைந்துள்ளது. இது முன்பு மனை அங்கீகாரம் வாங்கப்படாமல் இருந்தது. தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் அரசியல் பிரமுகர் ஒருவரின் தன்னிச்சையான முயற்சியால் நகராட்சியிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இங்குள்ள ரோட்டை தோண்டி இரவோடு இரவாக குழாய் பதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரோடு பணி, குழாய் பதிக்கும் பணியோ எவ்வித பணியாகினும், நகர்மன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும். இத்தகைய சூழலில் எவ்வித தீர்மானம், அனுமதியின்றி இந்த ரோட்டை தோண்டி குழாய் பதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை தேவையாகி உள்ளது. நகரமைப்பு பிரிவினர் இந்த பகுதிக்கு மனை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வடிகால் வாரியம் பதித்ததாக கூறினாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் இன்னும் குழாய் பதிக்கப்படாமல் உள்ளது. மதுரை ரோடு மேல்நிலை தொட்டியில் இருந்து தான் வசந்தம் நகருக்கு தண்ணீர் வரும். வரும் வழிகளில் பதிக்காமல் இங்கு பதித்துள்ளது வினோதமாக உள்ளது.
அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குழாய் இணைப்பு பெயரை சொல்லி வசூலிக்க இது போன்று நடந்ததா என தெரியவில்லை. இது குறித்து நகராட்சித் தலைவர் மாதவன்: குடிநீர் வடிகால் வாரியம் தான் பதித்துள்ளது. நகர் முழுவதும் மெயின் சப்ளை குழாய் பதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

