/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாலை அகலப்படுத்தும் பணிக்காக சுருங்கும் நீர் வரத்து ஓடை-- விவசாயிகள் ஆதங்கம்
/
சாலை அகலப்படுத்தும் பணிக்காக சுருங்கும் நீர் வரத்து ஓடை-- விவசாயிகள் ஆதங்கம்
சாலை அகலப்படுத்தும் பணிக்காக சுருங்கும் நீர் வரத்து ஓடை-- விவசாயிகள் ஆதங்கம்
சாலை அகலப்படுத்தும் பணிக்காக சுருங்கும் நீர் வரத்து ஓடை-- விவசாயிகள் ஆதங்கம்
ADDED : டிச 21, 2025 05:55 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் மெயின் ரோட்டை அகலப்படுத்தும் பணிக்காக நீர்வழி ஓடையை சுருக்கி வருவதால் நீர்வரத்து தடை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வந்த தொடர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக சிங்கத்திருளப்ப சுவாமி கோயில் தெப்பம் வரை சாலையை மேலும் 10 அடி அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த பகுதியில் இருந்து விரிவாக்க பணிகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஓடையின் அகலத்தை சுருக்கும் விதமாக 5 முதல் 6 அடி வரை ஓடைடையின் உள்ளே தடுப்புச் சுவர் கட்டி வருகின்றனர். இதனால் நீர் வழி பாதையின் அகலம் மேலும் குறைந்துள்ளது.
இதுகுறித்து பெரியாதி குளம் பாசன விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: அனுமதி இன்றி ஓடையில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் முழுமையாக அகற்றவில்லை. 25 அடி அகலம் இருந்த நீர் வழி ஓடை முகில் வண்ணம் பிள்ளை தெருவில் தொடங்கி பணிகள் நடந்து வரும் பகுதி வரை பெரிதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பதிலாக ஓடையை மேலும் சுருக்கி வருவதால் கண்மாய்க்கு நீர் வரத்து தடை ஏற்படும். அதிகாரிகள் பரிசீலனை ஏற்ப செய்ய வேண்டும்.

