/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடுகளில் வேகத்தடைக்கு மாற்றாக எச்சரிக்கை வாசகங்கள்; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : செப் 29, 2024 11:47 PM

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரோடுகளில் வேகத்தடை அதிகளவில் இருப்பதால் டூவீலர்களில் செல்வோர் விபத்தை சந்திப்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து வேக தடைகளுக்கு பதில் எச்சரிக்கை வாசகங்களை ரோட்டில் எழுதும் பணியை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை திருச்சுழி ரோடு, குலசேகரநல்லுார் பகுதி, பந்தல்குடி ரோடு உட்பட ரோடுகளில் அதிகமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து இருப்பதால் டூவீலர்களில் செல்பவர்கள் சிரமப்படுவதுடன், தடுமாறி அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.
இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடைகளை அகற்றி, அதற்கு பதிலாக எச்சரிக்கை வாசகங்களான மெதுவாக செல்லவும், பள்ளி பகுதி என ஆங்கிலத்தில் தெர்மோ பிளாஸ்ட் பெயின்டால் எழுதுகின்றனர்.
குலசேகரநல்லுார், முத்து ராமலிங்கபுரம் பள்ளிகள் அருகில் உள்ள ரோடுகளில் முதற் கட்டமாக எச்சரிக்கை வாசகங்கள் எழுதும் பணி நடக்கிறது. பின் அருப்புக்கோட்டை திருச்சுழி ரோடு, பந்தல்குடி ரோடு பகுதிகளில் தொடர்ந்து பணிகள் நடக்கும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.