ADDED : ஏப் 10, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் சி.பி.எஸ்., சந்தா இறுதி தொகை வழங்க கோரும் கோப்பு, அரசாணை 33ல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்க கோரும் கோப்பு கடந்த 2 ஆண்டுகளாக தலைமை செயலகத்தில் நிலுவையாக உள்ளதற்கு விரைவாக ஒப்புதல் வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை வகித்தார்.
கிளை தலைவர்கள் ரத்தினக்குமார், மாரியப்பன், வெங்கடேஷ்,அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் பேசினர்.

