/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை விரிவாக்க பணி
/
சாத்துாரில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை விரிவாக்க பணி
சாத்துாரில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை விரிவாக்க பணி
சாத்துாரில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை விரிவாக்க பணி
ADDED : நவ 12, 2024 04:35 AM
சாத்துார்: சாத்துார் நகராட்சியில் ஆமை வேகத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்துார் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. காமராஜர் ஆட்சி காலத்தில் 12 வார்டுகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டது. 2010 தி.மு.க., ஆட்சியில் 32 கோடி மதிப்பில் பாக்கியுள்ள 12 வார்டுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டது. இதன் பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாகவும் ஒப்பந்ததாரர்கள் அடிக்கடி மாறியதாலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்தது.
ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டதால் தெருக்கள் முழுவதும் குண்டும் குழியுமாக காணப்பட்டது. மக்கள் கடும் அவதிப்பட்டனர்.இந்த நிலையில் பணிகள் துவங்கி 14 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை முழுமையாக பணி நிறைவடையவில்லை. வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
மேலும் புதிய பாதாள சாக்கடை திட்டத்தில் ஏர் மோஷன் குழாய்கள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் இணைப்பு பெற்றவர்கள் வீடுகளுக்குள் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது.
முழுமையாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாததால் மேல காந்தி நகரின் குறுக்கு தெருக்களில் ரோடு போட முடியாத நிலை உள்ளது.இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

