/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெட்டப்படும் மரக்கிளை ரோட்டிலேயே கிடப்பதால் விபத்திற்கு வாய்ப்பு
/
வெட்டப்படும் மரக்கிளை ரோட்டிலேயே கிடப்பதால் விபத்திற்கு வாய்ப்பு
வெட்டப்படும் மரக்கிளை ரோட்டிலேயே கிடப்பதால் விபத்திற்கு வாய்ப்பு
வெட்டப்படும் மரக்கிளை ரோட்டிலேயே கிடப்பதால் விபத்திற்கு வாய்ப்பு
ADDED : டிச 16, 2025 06:18 AM
சிவகாசி: மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் மின் துறையினரால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது வெட்டப்படும் மரக்கிளைகளை உடனடியாக அகற்றுவது இல்லை. ரோட்டிலேயே கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகிக்கிறது.
மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் பொதுவாக மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள மரங்களால் காற்று அடிக்கும் போது மழை பெய்யும் போது மின் ஒயர்களில் உராய்வு ஏற்பட்டு மின்தடை ஏற்படும். மேலும் வேறு அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் பகுதிவாரியாக மின் துறையினரால் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த பராமரிப்பு பணியின் போது மின் கம்பங்கள் டிரான்ஸ்பார்மர்களின் மின் ஒயர்களில் சிக்கி இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி விடுவர். பெரும்பாலும் குடியிருப்பு பகுதி. மெயின் ரோடுகளில் இவ்வாறு வெட்டப்படும் மரக் கிளைகள் அப்படியே போடப்பட்டு விடுகிறது. உடனடியாக அகற்றப்படுவது இல்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்திற்கும் வழி வகிக்கிறது.
இரவில் வாகனங்களில் வருபவர்கள் ரோட்டில் கிடக்கும் மரக்கிளைகள் தெரியாததால் விபத்தில் சிக்குகின்றனர். ஒரு சில இடங்களில் வெட்டப்படும் மரக்கிளைகள் வாறுகாலில் போடப்பட்டு துார்ந்து விடுகிறது. மேலும் தொடர்ந்து அதே இடத்தில் இந்த கழிவுகள் கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்கள் இருப்பிடமாகவும் மாற்றிக் கொள்கிறது.
இவைகள் அவ்வப்போது வெளியேறி ரோட்டில் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. தவிர கழிவுகளில் தீ பற்ற வைப்பதாலும் அசம்பாவிதம் ஏற்படுகிறது. எனவே இவ்வாறு வெட்டப்படும் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

