/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருநெல்வேலி பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு
/
திருநெல்வேலி பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு
ADDED : பிப் 09, 2024 02:14 AM
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த பக்தர் மகேஸ்வரன் 42, உயிரிழந்தார்.
திசையன்விளை இட்டமொழியை சேர்ந்தவர் மகேஸ்வரன், ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது நண்பர்களுடன் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
தரிசனம் செய்துவிட்டு மதியம் 3:00 மணிக்கு கீழே இறங்கிய நிலையில் பச்சரிசி பாறை என்ற இடத்தில் நடந்து வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு தவறி விழுந்து உயிரிழந்தார். போலீசார், வனத்துறையினர் அவரது உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாப்டூர் போலீசார் விசாரித்தனர்.

